மல்லிகார்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் தரிசனம்.



ராமர் வழிபட்ட தலம், தருமர் வழிபட்ட தலம், அதியமான் வணங்கிய தலம், சூலினிதுர்கை எழுந்தருளியுள்ள தலம், தொங்கும் தூண் உள்ள தலம், தூணில் அற்புத கலைப்படைப்புகள் உள்ள தலம், விதானத்தில் அஷ்டதிக் பாலகர்கள் அருள்பாலிக்கும் தலம், வேளா மரம் தலவிருட்சமாக உள்ள தலம், கல்யாண வரமருளும் கல்யாண காமாட்சி அன்னை வீற்றிருக்கும் தலம் என பற்பல சிறப்புகளை உடைய தகடூர் எனும் தருமபுரி, ஸ்ரீ கல்யாண காமாட்சி உடனுறை ஸ்ரீ மல்லிகார்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் தரிசனம்.