சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
எண் பெருஞ் சித்திகளை விளக்கம்
அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.
1திருமூலர்
2 இராமதேவ சித்தர்
3 அகத்தியர்
4 இடைக்காடர்
5 தன்வந்திரி
6 வால்மீகி
7 கமலமுனி
8 போகர்
9 மச்சமுனி
10 கொங்கணர்
11 பதஞ்சலி
12 நந்தி தேவர்
13 போதகுரு
14 பாம்பாட்டி சித்தர்
15 சட்டைமுனி
16 சுந்தரானந்தர்
17 குதம்பைச்சித்தர்
18 கோரக்கர்
1திருமூலர்
திருமூலர் திருக்கயிலை மலையில் வாழ்ந்திருந்தவர். சிவபக்தர். நந்தியெம்பெருமானிடம் உபதேசம் பெற்றவர். சிறந்த சிவயோகி. வேத சாஸ்திரங்களில் தேர்ந்த ஞானி. அகத்தியரைச் சந்திக்கவும், சிவத்தலங்களை தரிசிக்கவும் தென்னாடு வந்தவர். தில்லையம்பதி சென்று பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்றோருடன் தவம் செய்தவர். அங்கு சிவபெருமானின் தாண்டவம் கண்ட பின் பொதிகை மலை புறப்படுகிறார். காவிரிக் கரையில் உள்ள சாத்தனூருக்கு வரும்போது, மேய்ச்சல் காட்டில் மாடுகள் ஓலக்குரல் எழுப்புவது கண்டு நிற்கிறார். அங்கு, மேய்ப்பன் மூலன் இறந்து கிடக்கிறான். அந்தத் துயர் பொறுக்க முடியாமலே மாடுகள் அழுகின்றன.
துன்பம் சகியாத அவர். தன் உடலை ஒரு மரத்தின் வேர்ப்பகுதியில் மறைத்து வைத்து விட்டு, மூலனின் உடலுக்குள் கூடுவிட்டு கூடு பாய்கிறார். கதறியழும் மாடுகள். உயிர்ப்பித்து எழுந்த மூலனைக் கண்டு மகிழ்ச்சியில் கத்துகின்றன!
மீண்டும் தன் உடலைத் தேடி அந்த மரத்தின் மறைவிடம் போகும்போது, அங்கு அவரின் உடலைக் காணவில்லை! ஈசனின் 'திருவிளையாடல்' அது என்பதை உணர்ந்தவர், திருவாவடுதுறையை அடைகிறார்.
அங்குள்ள அரசமரத்தின் கீழ் நிட்டையில் அமர்கிறார். சரியை முதலிய நால்நெறி உணர்த்தும் திருமந்திர மாலையினை ஆண்டுக்கு ஒரு பாடலென ஆக்கியருளினார்.
‘ஒன்றவன்தானே’ எனத் தொடங்கி மூவாயிரம் பாடல்களை யாத்தபின் மீண்டும் கயிலை சென்று ஈசனின் திருவடிகளில் சரணடைந்து இறுதிநிலை எய்தினார்.
2 இராமதேவ சித்தர்
இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார். இக்கருத்தை அவர் தம் பாடலில்,
மெய்ராம தேவர் ஆதி வேதப் பிராமணராம் பின்புஉய்யவே மறவர்தேவர் உயர்குலச் சாதியப்பா எனவுரைத்துள்ளார். இவர் மெக்காவுக்குச் சென்று இசுலாமுக்கு மதமாறி யாக்கோபு என்ற பெயருடன் தமிழகம் வந்தததாக சொல்லப்படுகிறது.
3 அகத்தியர்
அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரம் ஆவார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை ஆகும்.
4 இடைக்காடர்
இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.
இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார். [1]
5 தன்வந்திரி
தன்வந்திரி (Dhanvantari) இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள்சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி(தனிக்கோயிலில்) காணப்படுகிறார். இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது
6 வால்மீகி வால்மீகி அல்லது வால்மீகி முனிவர் என்பவர் இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில்ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு வடயிந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
7 கமலமுனி
இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். "கமலமுனி முந்நூறு'' என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.
8 போகர்
போகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று சிலர் கூறுகின்றனர்.[யார்?] இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதரின் சீடர் ஆவார். போகரின் சீடர் புலிப்பாணி ஆவார். சீனாவில் போகர் போ-யாங் என்று அறியப்படுகிறார். போகர் ஏழாயிரம், 700 யோகம், போகர் நிகண்டு மற்றும் 17000 சூத்திரம் ஆகிய நூல்கள் போகரால் இயற்றப்பட்டவை என்று கருதப்படுகின்றன.
9 மச்சமுனி
மச்சமுனி காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”காலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற புராணகால கதை ஒன்றும் சொல்லப் படுகிறது.
10 கொங்கணர்
எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர்.அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.
11 பதஞ்சலி
📷பதஞ்சலி முனிவர்
பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகப் பின்பற்றப்படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம்[1] எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.
12 நந்தி தேவர்
📷
சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர்ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார். [1]
13 போதகுரு
14 பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டி சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.
15 சட்டைமுனி
சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டு அவரிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருப்பதை உணர்ந்து சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.
சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.
இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது
16 சுந்தரானந்தர்
இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டார் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது.இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
17 குதம்பைச்சித்தர்
குதம்பைச்சித்தர்
தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் சித்து செய்து விளையாடும் மனத்தைத் தெய்வமாகக் கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்களில் 18 பேர் தொகுக்கப்பட்டுப் பதினெண்-சித்தர் எனக் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர்.
குதம்பை என்பது மகளிர் காதுகளில் அணியும் வளையம். குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறோம். உண்மையில் பார்க்கப்போனால் குதப்பும் (சொதப்பும்) மனத்தைத்தான் குதம்பை என்கிறார். இவரது பாடல்கள் 33 உள்ளன.
பட்டயம், முத்திரை, உத்தியம்(இலக்கு), ஆசை, மோகம், ஏகாந்தத் துறவு, ஞானம், பல்லாக்கு-ஊர்தி, கோலம்(ஒப்பனை), கைத்தாளம்(மகிழ்ச்சி), - போன்றவை வீண் ஆடம்பரங்கள் என்று இவர் குறிப்பிடுகிறார்.
ஆனந்தம் பொங்கி அளவோடு இருக்கவேண்டும்[4] என்பன போன்ற கருத்துக்களை இவர் வாரி வழங்கியுள்ளார்.
இவரது பாடல்களில் சில இரட்டுற மொழிதலாக அமைந்துள்ளன. [
18 கோரக்கர்
கோரக்கர் வாழ்ந்தது 11ஆம் நூற்றாண்டு எனப்பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் போதும், சில சான்றுகள் அவர் 10 முதல் 15ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவர் என்றும் எண்ணச்செய்கின்றன. வடநாட்டில் பஞ்சாப் அல்லது கிழக்கிந்தியப் பகுதியில் அவதரித்த கோரக்கர், ஆரம்பத்தில் பௌத்தராக இருந்ததாகவும், யோகம், சைவம் என்பவற்றில் ஈர்ப்புக்கொண்டு பின் சைவராக மாறியதாகவும் சொல்லப்படுகின்றது.[1]
கோரக்கரின் குரு மச்சேந்திரர் என்பதில் வடநாட்டுத் தென்னாட்டுத் தொன்மங்களில் யாதொரு வேறுபாடும் இல்லை. இமயத்திலிருந்து இலங்கை வரை, இன்றைய காந்தாரத்திலிருந்து அஸ்ஸாம் வரை, அவர் பாரதத்திருநாடு முழுவதும் பயணம் செய்திருந்தமைக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இறுதியில் அவர் மராட்டியத்துகணேசபுரியில் அல்லது கோரக்பூரில் சமாதி அடைந்ததாக[5], வடநாட்டு மரபுகள் உண்டு