புத்தர்

கண் விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டு காணப்படும். களைத்திருப்பவனுக்கு வழி வெகு தொலைவாக இருக்கும். நல்லறத்தை அறியாத முட்டாள்களுக்குச் சம்சாரத் தொடர் எல்லையற்றது. நல்ல வழியில் நன்கு நிர்வகிக்கப் பெற்ற மனம்தான் நமக்கு மாபெரும் உதவி செய்யும்.

இந்த உலகில் எந்தக்காலத்திலும் பகை, பகையால் தணிவதில்லை; பகை அன்பினாலேயே தணியும்; இதுவே பண்டைய நெறி. பெரியோர்கள், பகை என்னும் நெருப்பை நட்பு என்னும் நீரால் அணைப்பார்கள்...... புத்தர்.