ஓஷோ;எனக்கு எப்படி தெரியும்? இந்த கேள்விக்கு நான் எவ்வாறு பதில் சொல்ல முடியும்? உன்னைத் தவிர வேறு யாரும் இதற்கு பதில் சொல்ல முடியாது.உனக்காக நான் பதிலளிக்க முடியாது. நான் யார் என்று எனக்குத் தெரியும், ஆனால் நீ யார் என்று நான் எப்படி சொல்ல முடியும்?
உனக்குள் நீயே ஆழ்ந்து போக வேண்டும். உனக்காக பதில் சொல்லுகின்ற மக்கள் உன் எதிரிகள். ஏனெனில் அவர்களின் பதில்களைச் சேகரித்து,சேமித்து வைக்க நீ துவங்குவாய் .உனக்கு அறிவு வளரும்.அறிவு வளர்ச்சி விவேகம் வளர்வதைத் தடுக்கும்.
ஆமாம், ஆயிரக்கணக்கான பதில்கள் உள்ளன . நான் உங்களுக்கு மிக எளிதாக பதில் சொல்ல முடியும்: நீ தான் ஆன்மா, நித்தியமான, மரணமற்றவன். நீ கடவுளின் மகன்களின் ஒருவன் , இறவாத்தன்மையின் புதல்வன் - அமிர்தஸ்ய புத்திரன் . இவ்வளவு அழகான விஷயங்களை உங்களுக்கு சொல்ல முடியும்.காலங்காலமாக இப்படித்தான் சொல்லி வந்திருக்கிறார்கள் ஆனால் அவை உதவி செய்யப் போவதில்லை. நீ அதையே பிடித்து தொங்கி கொண்டிருந்தால்,நான் உனக்கு உதவி செய்யவில்லை, நான் உனக்கு தடங்கலாக இருந்திருக்கிறேன்.. நான், உனக்கு குரு அல்ல , எதிரி, நண்பனில்லை...
உனக்காக நான் பதில் சொல்ல முடியாது. உன்னைத் தவிர வேறு யாராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி.
நீதான் உனக்குள் போக வேண்டும். நீ தேட வேண்டும். நீயே கேட்டு விசாரிக்க வேண்டும், "நான் யார்?" இது தனிப்பட்ட, மிகவும் தனிப்பட்டகேள்வியாகும். இதற்கு உனக்கு மட்டுமே பதில் தெரியும் - ஆனால் சுவடிகளில் கிடையாது.உன் இருத்தலில் ஆழ்ந்து, ஆழ்ந்து போய் விசாரணை செய், அந்த விசாரிப்புதான் தியானம்.
ரமண மகரிஷி தனது சீடர்களுக்கு ஒரே ஒரு தியானத்தைத்தான் கொடுத்தார்: மௌனமாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டேயிரு, "நான் யார்?" முதலில் வாய்விட்டு , பின்னர் மெதுவாக மெதுவாக வார்த்தைகள் மறையட்டும். பிறகு அந்தக் கேள்வியே ஒரு உணர்வாக மாறட்டும்: "நான் யார்?" - ஒரு உணர்வு, உன் இதயத்தில் ஆழத்தில் உள்ள ஒரு கேள்வி குறி.அவ்வளவுதான்.கேட்டுக் கொண்டேயிரு. ஒரு நாள் அந்த உணர்வும் காணாமல் போகும். கேள்வியே கிடையாது.திடீரென்று நீ கேள்வியற்றிருப்பாய்...
"நான் யார்?" என்ற கேள்வி மற்ற எல்லா கேள்விகளையும் அழித்துவிடும் , பிறகு அந்தக் கேள்வியே தற்கொலை செய்து கொள்ளும் : நீ கேள்வியற்று இருப்பாய்.அந்தக் நொடி தான்,பதில் உனக்குள் எழக்கூடிய தருணம்.
பிறகு, உனக்கே பதில் தெரிந்தாலும், நீ அதை வேறு யாரிடமும் சொல்ல முடியாது. அது சொல்ல முடியாத ஓன்று...
.
இன்னும் வரும்....
மூலம்;The White Lotus,Osho...