காலம் மாறிவிட்டது

*காலம் மாறிவிட்டது*


முன் கடந்து போவோரின்


*முகம்* காண முடியவில்லை.


பின் நின்று சிரிப்போரின்


*எண்ணம்* எனக்கு புரியவில்லை.


*தலை* தாழ்ந்தே எங்கும் பயணம்.


*தொடுதிரையை* தொட்டபடி


*உள்ளங்கையில்* தான் உலகம்.


என் *கைபேசி* காதலியானாள்- நான்


கட்டிய *மனையாள்* நெடுந்தூரம் போனாள்...


உற்றாரும் உறவினரும் *Family* குரூப்பில்,


நண்பனும் அவனின் நண்பனும் *நட்பெனும்* குரூப்பில்.


*சாமக் கோழி* கூவிய பின்னும்,


*கொக்கரக்கோ* கேட்கும் முன்னும்,


*வாட்ஸ்சாப்பில்* மூழ்கலானேன் - *நிஜமெனும்* வசந்தத்தை *நிழலாலே* மறந்தும் போனேன்.


எவர் எவருக்கோ *பிறந்த நாள்* வாழ்த்து.. அடுத்தவர் *இழப்பிற்கு* துக்கச்சேதி.


*Hi* என எவரோ அனுப்ப


*Hai* என பதிலுரைத்தேன் - ஏனோ


நான் பெற்ற பிள்ளை


*'அப்பா*'என்றழைக்க,


சற்றே புருவம் உயர்த்தி


பார்வையாலே *சுட்டெரித்தேன்...*


அடுத்தவரின்,


*Status* பார்த்து ரசித்தேன்,


*profile* பார்த்து வியந்தேன்,


*Picture Msg* பார்த்து லயித்தேன்,


*video* பதிவிறக்க ஆர்வத்தில்.


கை அலம்பியபின் யோசித்தேன்.


*நான் என்ன சாப்பிட்டேன்* என்பதை...


*மாமன்* வீட்ட வெந்தியக் குழம்பு,


*மாமி* பொறித்த அப்பளம்,


*தங்கை* வீட்டு தக்காளிச்சோறு,


*மதனி* சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,


*அமிர்தம்* தந்த மனையாளிடம்.


இது நஞ்சை விட *கேவலமென்று..*.


*நானாய் சிரித்தேன்,*


*நானாய் அழுதேன்,*


*நானாய் வியந்தேன்,*


*நானாய் ரசித்தேன்*-ஏனோ


நான்,


*நானாய் மட்டும் இல்லை...*


*ஆண்ட்ராய்டில்* அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.


என் *குடும்பம்* விலகி போவதை கண்டும் கூட


*Network* கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...


*இமேஜில்* கூட


சிரிப்பு, அழுகை, சோகம், வெட்கம் ,


ஆடல், பாடல், குடும்பம், நட்பு என அனைத்தும்.


ஆனால்...


நான் நிமிர்ந்து பார்க்கும் போது


*என் முன்னே எவருமில்லை.,*


சுற்றமும், நட்பும்


*உள்ளங்கை உலகத்தோடு* எனை கடந்து போயினர்...


இது *வாட்ஸ் ஆப்(பு)* உலகம்-போதும்


சொந்தமே.,


இனி என்னோடு *நேரினில்* புன்னகையிடுங்கள்.


நட்பே., வா *தெருவோர டீக்கடை* நமக்காய் 

தவம் தவம் கிடக்கிறது...! 


படித்ததில் மனதை நெருடியது.....